இந்த வரு­டத்தில் கடந்த 5 மாதங்­களில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­ போது சுமார் 38 இலட்சம் ரூபா போலி நாண­யத்­தாள்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. 

இது­ தொ­டர்­பாக பொலிஸ் தலை­மை­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­ போது 38 இலட்­சத்தி 94 ஆயி­ரத்து 600 ரூபா போலி நாண­யங்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. 

இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட போலி நாண­யத்­தாள்­களில் ஆயிரம் ரூபா தாள்­களே அதிகம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் 174 – 5 ஆயிரம் ரூபா நாண­யத்­தாள்­களும், 2000 ரூபா நாண­யத்­தாள்கள் 46, 1000 ரூபா நாண­யத்­தாள்கள் 2272 கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அதே­போன்று 500 ரூபா நாண­யத்­தாள்கள் 1320 மற்றும் 100 ரூபா  நாண­யத்­தாள்கள் 6 குறித்த சுற்­றி­வ­ளைப்­பின்­போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்பட்­டுள்­ளன. அத்­துடன் இவ்­வா­றான போலி நாண­யத்­தாள்கள் தொடர்­பான தக­வல்கள் கிடைக்கும் பட்­சத்தில், பொலிஸ் திணைக்­க­ளத்தின் போலி நாண­யத்தாள் பிரிவின் 0112326670 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு அறி­விக்க முடியும்

இதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை 6 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான போலி 5 ஆயிரம் ரூபா தாள்கள் ஒருதொகையுடன்   5 சந்தேக நபர்கள் மத்துகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.