சர்வதேச லயன்ஸ் கழகங்களின் மாவட்டம் 306 பி1 பிரிவின் 20வது மாநாடு ஏற்பாடு

05 May, 2025 | 05:38 PM
image

சர்வதேச லயன்ஸ் கழகங்களின் மாவட்டம் 306 பி1 பிரிவு, அதன் 20ஆவது வருட மாவட்ட மாநாட்டை சிலாபத்தில் உள்ள கரோலினா பீச் ரிசோர்ட் - ஸ்பாவில் எதிர்வரும் 9, 10, 11 ஆகிய திகதிகளில் நடத்தவுள்ளது. 

இந்த மாநாடானது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை மனிதாபிமான அடிப்படையில் இரண்டு தசாப்தங்களாக மாறா சேவையை எடுத்துக்காட்டும்  இறுதி மாநாடாக வரலாற்றுச் சிறப்பு பெறுகிறது. 

இந்நிகழ்வானது மாவட்ட ஆளுநர் லயன் ரஜித ரொட்ரிகோ மற்றும் அவரது சேவையில் துணைவர் லயன் நடாஷா டி கோஸ்டா ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் முன்னாள் பணிப்பாளர் (PID) லயன் டோனி பென்போவும் அவரது துணைவியார் லயன் சூ பென்போவும் கலந்துகொள்ளவுள்ளனர். 

மேலும், முன்னாள் தலைவர் மகேந்திர அமரசூரிய PMJF, LCIF டிரஸ்டி, PID மஹேஷ் பஸ்குவல் PMJF மற்றும் PID சுனில், வட்டவல PMJF ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக, இலங்கையின் Chartered Accountants இன்ஸ்டிடியூட்டின் துணைத் தலைவர் திஷான் சுபசிங்க, “தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் சமூக மேம்பாட்டில் புதுமை” என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த மாநாடு “We Serve” என்ற முழக்கத்தின் கீழ், சேவை, நட்புறவு மற்றும் உலகளாவிய குடிமைத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுகூரவும் உறுதிப்படுத்தவும் இலங்கை முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான லயன்ஸ் கழக உறுப்பினர்களை ஒன்றிணைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right