நடிகர்- இசையமைப்பாளர்- நாட்டிய கலைஞர் - தொலைக்காட்சி தொகுப்பாளர் என, பன்முக திறமை வாய்ந்த ராகவ் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் 'நொக் நொக்' (Knock Knock) திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ராகவ் ரங்கநாதனுடன் சேர்ந்து, கார்த்திக் குமார், சனம் ஷெட்டி, லட்சுமி பிரியா சந்திர மௌலி, பப்லு, வட்சன் சக்கரவர்த்தி மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, நவீன் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
ஃபெண்டஸி திரில்லர் பாணியிலான இந்த திரைப்படத்தை, ‘இல்யூஷன் இன்ஃபினிட்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஆர்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
இதுகுறித்து, படத்தின் இயக்குநரும், நாயகனுமான ராகவ் ரங்கநாதன் பேசுகையில், ''இந்தப் படத்தின் கதையை எமக்காக எழுதினேன். ஆனால் நான் கதையின் நாயகன் கிடையாது. கதை தான் நாயகன். இப்படம் இரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்பதை மட்டும் உறுதியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM