பதுளை பாடசாலையொன்றில் மொன்பானமருந்திய 25 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக பதுளை வைத்தியாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதுளை பாடசாலையொன்றில் செயல்முறைப்பயிற்சியொன்றின் போது, மென்பானத்தினை அருந்திய 25 மாணவர்களே குறித்த மென்பானம் ஒவ்வாமையினால்  பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள தர்மதூத மத்திய கல்லூரியில் இன்று பகல் ஒரு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படிக் கல்லூரியில் ஆண்டு 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயல்முறைப் பயிற்சியொன்று இடம்பெற்றது. 

இப்பயிற்சியின் போது தயார் செய்த மென்பானத்தை அம்மாணவர்கள் அருந்தியுள்ளனர்.

இதையடுத்து, அருந்தி 25 மாணவர்களுக்கும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டு, மயக்கமுற்றனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் பஸ்சொன்றின் மூலம் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் இம்மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம் மாணவர்கள் அருந்திய மென்பனத்தின் மாதிரிகள் வைத்திய பரிசோதனைக் குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலையில்  குறிப்பிட்ட வகுப்பிற்குரிய ஆசிரியர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.