(நெவில் அன்தனி)
தரம்சாலா ஹிமாச்சல் ப்ரதேஷ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றக்கிழமை (04) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 54ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 37 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் 15 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைக் குவித்தது.
ப்ரப்சிம்ரன் சிங் நான்கு இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணிக்கு தெம்பூட்டினார்.
ஜொஷ் இங்லிஷஸுடன் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களையும் நெஹால் வதேராவுடன் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் ஷஷாங் சிங்குடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் பகிர்ந்தார்.
48 பந்துகளை எதிர்கொண்ட ப்ரப்சிம்ரன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 45 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ஷஷாங் சிங் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆகாஷ் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திக்வேஷ் ரதி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதல் அயுஷ் படோனி 40 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்ககளுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரும் அப்துல் சமாதும் 6ஆவது விக்கெட்ல் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அப்துல் சமாத் 24 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
வேறு எவரும் துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ப்ரப்சிம்ரன் சிங்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM