bestweb

கடைசிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய  போட்டியில்  ராஜஸ்தானை ஒரு ஓட்டத்தால் வென்றது கொல்கத்தா

Published By: Vishnu

05 May, 2025 | 12:24 AM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) கடைசிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 53ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை ஒரு ஓட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 13 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நிலையில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அண்ட்றே ரசல், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரஹ்மானுல்லா குர்பாஸ், அணித்  தலைவர் அஜின்கியா ரஹானே ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் கொல்கத்தாவின் வெற்றிக்கு வித்திட்டன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் அண்ட்றே ரசல் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் அஜின்கியா ரஹானே 24 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

அண்ட்றே ரசல், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் பகிர்ந்த 61 ஓட்டங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். வனிந்து ஹசரங்கவினால் விக்கெட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் 8ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், ரியான் பரக், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ரியான் பரக் 45 பந்துகளில் 6 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 34 ஓட்டங்களையும் ஷுபம் டுபே ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜொவ்ரா ஆச்சர் கடைசிப் பந்தில் இரண்டாவது ஓட்டத்தை எடுத்து ஆட்டத்தை சமநிலையில் முடிக்க முயற்சித்த போதிலும் ரின்கு சிங் அவரை ரன் அவுட் செய்தார்.

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அண்ட்றே ரசல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55