(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
தென் ஆபிரிக்காவும் பங்குபற்றும் இந்த மும்முனை மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி ஈட்டிய இரண்டாவது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும்.
ஆரம்பப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கைக்கு இந்த இரண்டு வெற்றிகளும் திருப்தியைக் கொடுத்துள்ளதுடன் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய வெற்றியில் சுகந்திகா குமாரி, அணித் தலைவி சமரி அத்தபத்து ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷிகா சில்வா ஆகியோர் குவித்த அபரா சதங்களும் இலங்கை மகளிர் அணியை வெற்றிபெறச் செய்தன.
இந்திய மகளிர்; அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 276 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
விஷ்மி குணரட்ன 33 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம 53 ஓட்டங்களுடனும் சமரி அத்தபத்து 23 ஓட்டங்களுடனும் களம் விட்டகன்றனர். (152 - 4 விக்.)
இந் நிலையில் கவிஷா டில்ஹாரியும் நிலக்ஷிகா சில்வாவும் ஜோடி சேர்ந்த 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தைரியத்தைக் கொடுத்தனர்.
கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து தெவ்மி விஹங்கா ஒரு ஓட்டத்துடனும் நிலக்ஷிகா சில்வா 56 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க 43ஆவது ஓவரில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், அனுஷ்கா சஞ்சீவனி (23 ஆ.இ.), சுகந்திகா குமாரி (19 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து இலக்கை மகளிர் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
பந்துவீச்சில் ஸ்நேஹ் ரானா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.
ப்ரத்திகா ராவல் (35), ஸ்ம்ரித்தி மந்தனா (18) ஆகிய இருவரும் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் அவர்கள் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து 29 ஓட்டங்களைப் பெற்ற ஹார்லீன் டியோலுடன் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், 4ஆவது விக்கெட்டில் ஜெமிமா ரொட்றிகஸுடன் மேலும் 44 ஓட்டங்களை பகிர்ந்தார்.
ஹார்மன்ப்ரீத் கோர் 30 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர். (181 - 5 விக்.)
அதன் பின்னர் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பை ஊட்டினர்.
ரிச்சா கோஷ் 58 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பின்வரிசையில் காஷ்வீ கௌதம் 17 ஓட்டங்களையும் ஸ்நேஹ் ரானா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM