மெராயா பாடசாலையில் மாபெரும் கிரிகெட் தொடர் ; பழைய மாணவர்களால் ஏற்பாடு

04 May, 2025 | 04:59 PM
image

நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் மாபெரும் கிரிகெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டித் தொடரானது எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் டீஆர்ஐ விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணி முதல் வெகு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

பாடசாலையின்  அபிவிருத்தி நலன் திட்டங்களை நோக்கமாக கொண்டு, பழைய மாணவர் ஒன்றியத்தினால் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெராயா பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது வகுப்பு ரீதியாக அணிக்கு 11 பேரை கொண்டவர்களை தெரிவு செய்ய முடியும்.

குறிப்பாக ஒரு வகுப்பிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பற்ற முடியும் எனவும் ஒரு அணி நுழைவுக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட உள்ளதோடு பங்குபற்றிய அனைத்து அணிகளுக்கும்  பங்கு பற்றியதற்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப்படும்

எனவே, இந்த போட்டித் தொடரில் மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களும் பங்குபற்ற வேண்டும் என ஏற்பாட்டு குழு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34