திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொக்கீல் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போது, தேயிலை செடியினுள்ளிருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்தவர்களை கொட்டியுள்ளது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.