தொழிற்சாலை மற்றும் தனியார்நிறுவனங்களில் நின்று கொண்டே பணியாற்றுபவர்கள்,சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர்கள் என தங்களது பணியை இயல்பை விட அதிகமான நேரத்திற்கு நின்று கொண்டு செய்பவர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஏனைய கோளாறுகளால் கால் பகுதிகளில் வெரிகோஸிஸி வெயின் எனப்படும் பாதிப்பு ஏற்படும்.

காலில் திடீரென்று அரிப்பு, கால் வலி, கணுக்கால் அல்லது கால் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். டாப்ளர் என்ற கருவியின் மூலம் இதன் பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை கணக்கிடுவர். தொடக்க நிலையில் இருந்தால் மருந்து மற்றும் மாத்திரைகளாலும், விசேட காலுறையாலும் முழுமையான நிவாரணமும், குணமும் பெறலாம்.

ஒரு சிலருக்கு இந்த பாதிப்பிற்காக அறிமுகமாகியிருக்கும் ரேடியோ ப்ரீக்வென்ஸி அப்ளேசன் லேசர் என்ற நவீன சத்திர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்போது கால் பகுதிகளில் தேங்கியிருக்கும் அசுத்தமான இரத்தங்கள் சுத்தரிக்கப்படுகின்றன அல்லது அதனை அங்கிருந்து அகற்றப்பட்டு மேல்நோக்கி செலுத்தப்படுகின்றன.இதன் காரணமாக 48 மணி தியாலத்திற்குள் இந்த வெரிகோஸிஸ் வெயின் என்ற பாதிப்பு குறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் அதன் பிறகு தங்களின் நாளாந்த பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட இயலும்.

Dr. சங்கர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்