மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் காணொளி அழைப்புக்கான ஸ்கைப் செயலியின் சேவை மே 5 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகிறது.
காணொளி அழைப்புகளுக்காக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அந்த காலகட்டத்தில் காணொளி அழைப்புகளுக்கு ஸ்கைப் செயலிதான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஸ்கைப் செயலி சேவையை நிறுத்த கடந்த பெப்ரவரி மாதமே மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி மே மாதம் 5 ஆம் திகதி ஸ்கைப் செயலி சேவை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'டீம்ஸ்' செயலியை பயனர்கள், ஸ்கைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக டீம்ஸ் சேவை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசொஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அதாவது ஸ்கைப் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், சாட்கள் டீம்ஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஸ்கைப்பைவிட டீம்ஸ் செயலியில் மேலும் சில புதிய வசதிகள் இருப்பதாகவும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
மைக்ரோசொஃப்ட் டீம்ஸ் போல கூகுள் மீட், ஸூம் ஆகிய செயலிகளின் மூலமாகவும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM