bestweb

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 38 ஓட்டங்களால் வென்ற குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

Published By: Vishnu

03 May, 2025 | 05:19 AM
image

(நெவில் அன்தனி)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் அஹ்மதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 51ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் குஜராத் டைட்டன்ஸ் 14 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப் போட்டியில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ப்ளே ஒவ் சுற்று வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ், முன்வரிசை வீரர்களின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த சாய் சுதர்சன் 23 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 48 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலமான நிலையில் இட்டனர்.

ஷுப்மான் கில் 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார்.

வொஷிங்டன் சுந்தருடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஜொஸ் பட்லர் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களை அடித்தார்.

வொஷிங்டன் சுந்தர் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஐந்தாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 49 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரவிஸ் ஹெட் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இஷான் கிஷான் 13 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா, ஹென்றிச் க்ளாசன் ஆகிய இருவரும் 33 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், இருவரும் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி அடைவது உறுதியாயிற்று.

அபிஷேக் ஷர்மா 41 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 18 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

நிட்டிஷ் குமார் ரெட்டி 21 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ப்ராசித் கிரிஷ்ணா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30