(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களினால் இலங்கை மகளிர் அணி வெற்றியை சுவைத்தது.
முன்னதாக மல்சி மதாரா , தெவ்மினி விஹங்கா ஆகிய இருவரும் தங்களிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை கட்டுப்படுத்தினர்.
இப் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 46.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவி சமரி அத்தபத்து (06) இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறினார். (9 - 1 விக்.)
இதனைத் தொடர்ந்து ஆரம்ப வீராங்கனை ஹசினி பெரேராவுடன் ஜோடி சேர்ந்த விஷ்மி குணரட்ன 2ஆவது விக்கெட்டில் 69 பகிரப்படுவதற்கு உதவினார்.
அவர்கள் இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆடுகளம் விட்டகன்றனர். (90 - 3 விக்.)
விஷ்மி குணரட்ன 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடி நான்காவது விக்கெட்டில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
ஆனால், மீண்டும் இரண்டு விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
கவிஷா டில்ஹாரி 75 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 61 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 93 பந்துகளை எதிர்கொண்டு 77 ஓட்டங்களையும் பெற்றனர். (232 - 5 விக்.)
நிலக்ஷிக்கா சில்வா 11 அனுஷ்கா சஞ்சவீனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.
தஸ்மின் ப்ரிட்ஸ் (14), அணித் தலைவி லோரா வுல்வார்ட் (10), கராபோ மெசோ (9) ஆகிய மூவரையும் முறையே சுகந்திகா குமாரி, மல்கி மதாரா, இனோக்கா ஆகிய இருவரும் ஆட்டம் இழக்கச் செய்து இலங்கை மகளிர் அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், லாரா குட்ஆல் (46), சுனே லுஸ் (31) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தனர்.
அவர்கள் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து க்ளோ ட்ரையோன் (32), ஆன்ரீ டேர்க்சன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 182 ஓட்டங்களாக உயர்த்தினர்.
அதன் பின்னர் மல்சி மதாரா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றி தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 4ஆக உயர்த்திக்கொண்டார்.
ஆன்ரீ டேர்க்சன் 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மல்சி மதாரா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தெவ்மி விஹங்கா 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஹர்ஷித்தா சமரவிக்ரம.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM