நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

02 May, 2025 | 05:32 PM
image

இன நல்லிணக்கத்துக்காக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய ஆன்மிக சேவை அளப்பரியது. அவரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும்  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் விடுத்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

நல்லை ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. 

ஆன்மிகப் பணி என்பது புனிதமானது. அப்பணியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தவர்தான் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். ஆன்மிக சேவைக்கு அவர் ஒருபோதும் மாசு ஏற்படுத்தவில்லை. அதன் புனிதத்தன்மையை கடைசி வரை காத்தார்.

நெருக்கடியான நேரங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஆசி வேண்டி பூஜைகளை நடத்தியுள்ளார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்துள்ளார். இப்படியான மகான்களின் மறைவு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

பூரணமடைந்த சுவாமிகளின் ஆத்மா இறையடி சேர இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02