சூரியின் 'மாமன் ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

02 May, 2025 | 05:19 PM
image

தமிழ் சினிமாவின் புதிய முன்னணி நட்சத்திர நடிகரான சூரி கதையின் நாயகனாக - தாய்மாமனாக நடிக்கும் "மாமன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், விமல், ஐஸ்வர்ய லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர் , மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் , கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமிய பின்னணியில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 'மாமன்' திரைப்படத்தின் முன்னோட்டம்  வெளியிடப்பட்டிருக்கிறது.

சூரியின் இரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த இந்த முன்னோட்டத்தில் ... தாய் மாமன் உறவை மேன்மைப்படுத்தும் காட்சிகளும், கொமர்சல் சினிமாவிற்குரிய அம்சங்களும் இருப்பதால் இந்த முன்னோட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right