வறண்ட கண் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன கருவி

02 May, 2025 | 04:01 PM
image

இன்றைய திகதியில் இரண்டு வயது பிள்ளை முதல் எண்பது வயது வரை உள்ள முதியோர்கள் வரை கைபேசியில் உள்ள டிஜிட்டல் திரையை பார்வையிடும் நேரம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. 

மேலும் கைபேசியில் டிஜிட்டல் திரையை பார்வையிடும் போது.. கண்ணை உரிய முறையில் இமைக்காமல் பார்ப்பதாலும் கண்களில் இயல்பான ஈரத்தன்மை பாதிக்கப்பட்டு கண் வறட்சி ஏற்படுகிறது.

தற்போது இதற்கு நிவாரணம் அளிக்க ‘பஞ்ச்டல்’ பிளக்குகள் எனும் கருவியை பொருத்தும் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கணினி - கைபேசி - மடிக்கணினி - என இலத்திரனியல் சாதனங்களுடன் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்களில் வலி, பார்வையில் சிறிய தடுமாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பெரும்பாலும் கண்ணை பரிசோதித்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுவதற்குரிய பிரத்யேக குழாய்கள் அமையப்பெற்றுள்ளன.

இந்த குழாய்களுக்குள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பஞ்ச்டல் விளக்குகள் எனும் சிறிய அளவிலான கருவிகளை கண்களில் பொருத்துவார்கள். கண்களின் ஒரு முனை பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு பிரத்தியேக கருவியை பொருத்துகிறார்கள். 

இத்தகைய கண்ணீரை வெளியேற்றும் கருவி தற்காலிகமாகவும், நிரந்தரமானதாகவும் சூழலுக்கு ஏற்ப வைத்தியர்கள் நிர்ணயிப்பார்கள்.

இத்தகைய சிகிச்சை பாதுகாப்பானது என்றும் வைத்தியர்கள் உறுதி அளிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் பிரசாந்த்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேதமடைந்த நரம்புகள் மீண்டும் இயல்பான நிலைக்கு...

2025-05-22 16:03:43
news-image

டான்சில் கற்கள் எனும் பாதிப்புக்கான சிகிச்சை

2025-05-21 17:58:30
news-image

பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் “காலிக் பெயின்”...

2025-05-20 18:44:56
news-image

“உணவை நன்கு மென்று உண்ணுங்கள்…!”

2025-05-17 13:31:13
news-image

தேனில் ஊறவைத்த பூண்டு… இத்தனை நன்மைகளைத்...

2025-05-16 16:59:52
news-image

விபத்தில் பாதிக்கப்பட்ட விரல்களுக்கான நவீன சத்திர...

2025-05-14 16:05:53
news-image

சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள்...

2025-05-14 01:21:04
news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02