‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபெமிலி’.
சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
அதன் பின்னர் படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டியதையடுத்து, அவர்கள் தெரிவித்த நேர்மறையான விமர்சனங்கள், கூடுதல் எதிர்பார்ப்பையும் கொடுத்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் உலக திரையரங்குகளில் வெளியாகிய இத்திரைப்படம், இரசிகர்கள் மத்தியிலும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதற்கிடையே, படம் பார்த்துள்ள பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், “டூரிஸ்ட் ஃபெமிலி படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள படம். மிகவும் அழகானத் திரைப்படம். உளப்பூர்வமான படத்தை அளித்தப் படக்குழுவினருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM