(எம்.மனோசித்ரா)
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நாட்டில் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கும். மலையக மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைந்திருக்கும். இந்த அரசாங்கத்திடம் அதற்கான எந்த திட்டமும் இல்லை. பெருந்தோட்ட அபிவிருத்திக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியை விட இந்திய நிதி உதவிகளே அதிகமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலையில் வியாழக்கிழமை (1) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச உண்மையைக் கூறி வாக்கு கோரினார். ஆனால், அநுர குமார திஸாநாயக்க பொய் கூறி வாக்கு கோரினார். இறுதியில் அவர் கூறிய பொய்கள்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்னர் பெற்றோல் விலை 100 ரூபாவாகக் குறைக்கப்படும் என்றும், அரிசி மாபியா இல்லாதொழிக்கப்படும் என்றும், பாதாள உலகக் குழுக்கள் அழிக்கப்படும் என்றும் பொய்களைக் கூறினார்.
ஆனால், இவற்றில் இன்று என்ன நடந்திருக்கிறது? இன்னும் ஒரு வருடத்தில் அரசாங்கம் ஆட்டம் காணப்போகிறது. நாம் இந்நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முடியாது. நுவரெலியா மாவட்டத்தில் இரு பிரதேச சபைகள் மாத்திரமே காணப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தில் அவற்றை நாம் ஆறாக அதிகரித்தோம். ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் நீங்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.
எம்மால் இந்நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முடியாது. ஆகக் குறைந்தது எம்மால் அமைச்சரவை அமைச்சினை மாத்திரமே வகிக்க முடியும். அந்த இலக்கை அடைவதற்கு இந்த தேர்தலில் நுவரெலியாவிலுள்ள 6 பிரதேசபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நாட்டில் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கும்.
மலையக மக்களின் வாழ்க்கை தரமும் உயர்வடைந்திருக்கும். இந்த அரசாங்கத்திடம் அதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. மலையகத்துக்காக 2000 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய தொகை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவிகளாகும். எனவே இந்த பொய்யான அரசாங்கத்துக்கு இனியும் வாக்களிக்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
நேர்மையாக செயற்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு 6ஆம் திகதி தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் கிராமங்களுக்காக பணியாற்றுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM