யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சத்து இன்று காலை 11.20 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

இந்த சந்திப்பில் யாழ்.இந்திய துணைத்தூதர் என்.நடராஜனும் உடனிருந்தார். 

இதன் பின்னர் மதியம் 12.20 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை அவரது அலுவலகத்திலும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

இந்த கலந்துரையாடல்களில் வடக்கு மாகாண பொருளாதார மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.