பஞ்சாப் கிங்ஸ் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது, 8ஆவது தோல்வியுடன்  சென்னை  வெளியேறுவது பெரும்பாலும் உறுதியாயிற்று

Published By: Vishnu

01 May, 2025 | 03:22 AM
image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (30) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முன்னாள் சம்பியனும் 5 தடவகைள் சம்பியனுமான சென்னை சுப்பர் கிங்ஸை 2 பந்துகள் மீதம் இருக்க 4 விக்டெக்களால் பஞ்சாப் கிங்ஸ் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. அதேவேளை, 8ஆவது தோல்வியைத் தழுவிய சென்னை சுப்பர் கிங்ஸ் முதலாவது அணியாக போட்டியில் இருந்து வெளியேறுவது பெரும்பாலும் உறுதியாயிற்று.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் 18ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் அதன் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 19ஆவது ஓவரை வீசிய யுஸ்வேந்த்ர சஹால், அந்த ஓவரில் ஹெட்-ட்ரிக் உட்பட 4 விக்கெட்களைக் கைப்பற்றி சென்னை சுப்பர் கிங்ஸை தடுமாறச் செய்தார்.

19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் எம்.எஸ். தோனியை ஆட்டம் இழக்கச் செய்த யுஸ்வேந்த்ர சஹால், கடைசி 3 பந்துகளில் தீப்பக் ஹூடா, அன்ஷுல் கபோஜ், நூர் அஹமத் ஆகியோரை ஹெட் - ட்ரிக் முறையில் வெளியேற்றினார்.

ஐபிஎல் வரலாற்றில் யுஸ்வேந்த்ர சஹால் பதிவுசெய்த இரண்டாவது ஹெட் - ட்ரிக் இதுவாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக யுஸ்வேந்த்ர சஹால் தனது முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்திருந்தார்.

பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பம் சிற்ப்பாக அமையவில்லை.

முதல் 3 விக்கெட்கள் பவர் ப்ளேக்குள் சரிய சென்னை சுப்பர் கிங்ஸின் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய சாம் கரன், 4ஆவது விக்கெட்டில் டிவோல்ட் ப்ரெவிஸுடன் 78 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் எம்.எஸ். தோனியுடன் 46 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினார்.

டிவோல்ட் ப்ரெவிஸ் 32 ஓட்டங்களையும் சாம் கரன் 47 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் பெற்றனர்.

தோனி 4 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தோனியின் விக்கெட்   உட்பட் கடைசி 5 விக்கெட்கள் வெறும் 6 ஓட்டங்களுக்கு சரிந்தன.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 4 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்து ஒரே ஓவரில் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அர்ஷ்தீப் சிங் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

ப்ரியன்ஷ் ஆரியா (23), ப்ரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் 29 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அதிரடியான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங், அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சற்று பலப்படுத்தினர்.

ப்ரப்சிம்ரன் சிங் 36 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

அவரைத் தொடர்ந்து நெஹால் வதேரா (5) களம் புகுந்த சொற்ப நேரத்தில் வெளியேறினார்.

எனினும் ஷ்ரேயஸ் ஐயரும் ஷஷாங் சிங்கும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க உதவினர்.

ஆனால்,  ஷஷாங்   சிங் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மேலும் இரண்டு விக்கெட்கள் சரிந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மதீஷ பத்திரணவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

அவரை அடுத்து கடைசி ஓவரில் சூரியன்ஷ் ஷெஜ் (1) ஆட்டம் இழந்தார்.

எனினும் கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் மார்க்கோ ஜென்சனின் துடுப்பில் பட்ட பந்து பின்னோக்கி பவுண்டறிக்கு செல்ல பஞ்சாப் கிங்ஸின் வெற்றி உறுதியாயிற்று.

பந்துவீ;சசில் கலீல் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 45 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: ஷ்ரேயஸ் ஐயர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40