DLS முறைமை பிரகாரம் பங்களாதேஷ் இளையோர் அணி 39 ஓட்டங்களால் வெற்றி

30 Apr, 2025 | 07:36 PM
image

(நெவில் அன்தனி)

19 வயதுக்குட்பட்ட இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்ற மூன்றாவது  இளையோர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் 39 ஓட்டங்களால் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 6 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி முன்னிலையில் இருக்கிறது.

மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தடைப்பட்ட இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை  இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 38 ஓட்டங்களையும் ரிஸான் ஹொசன் ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

மழையினால் தடைப்பட்ட இப் போட்டியில் 28 ஓவர்களில் 198 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 22 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது  டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம்   இலங்கையின் வெற்றி இலக்கு 22 ஓவர்களில் 160 ஓட்டங்களாக இருந்தது. இதற்கு அமைய19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 39 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் ரமிரு பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

அல் பஹாத், அஸிஸுல் ஹக்கிம் ஆகிய இருவரும் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உபாதையீடு நேரத்தில் யுவிந்து கொடிதுவக்கு வைத்த...

2025-05-18 22:29:10
news-image

ஆசிய குத்துச்சண்டை 22 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-05-18 21:21:37
news-image

நடப்பு சம்பியன் இஸிபத்தனவை முன்னாள் சம்பியன்...

2025-05-18 12:03:45
news-image

ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் ஆறாம் நாளான...

2025-05-17 21:25:36
news-image

தேசிய சேவைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்தும்...

2025-05-17 21:22:06
news-image

ஆசிய குத்துச்சண்டை அரை இறுதிகளில் மிஹிரான்,...

2025-05-16 18:37:59
news-image

லொஸ் ஏஞ்சலிஸ் 2028க்கு நியாயமானதும் வெளிப்படையானதுமான...

2025-05-16 15:14:09
news-image

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இங்கிலாந்தின் பட்லருக்கு...

2025-05-16 15:05:11
news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49