(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான எஸ்.எல்.சி. தலைவர் கிண்ண தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் காலி அணி சம்பியனானது.
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற காலி அணிக்கும் தம்புள்ளை அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று புதன்கிழமை (30) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 57 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த காலி அணி சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சம்பியனான காலி அணிக்கு எஸ்.எல்.சி. தலைவர் கிண்ணத்துடன் 5,000,000/- ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தம்புள்ளை அணிக்கு 3,000,000/- ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட காலி அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 370 ஓட்டங்களைக் குவித்தது.
ஓஷத பெர்னாண்டோ சதம் குவித்ததுடன் தினேஷ் சந்திமால் அரைச் சதம் பெற்றார். அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஓஷத பெர்னாண்டோ 52 ஓட்டங்களுடன் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் அவர் மீண்டும் களம் நுழைந்து அணித் தலைவர் ரமேஷ் மெண்டிஸ}டன் 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் சற்று நேரத்தில் தனது சதத்தையும் பூர்த்திசெய்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி சகல விக்கெட்களையும் இழந்து 313 ஒட்டங்களை மாத்திரம் பெற்றது.
தம்புள்ளை சார்பாக விஷாத் ரந்திக்க சதம் குவித்ததுடன் ரொன் சந்த்ரகுப்தா அரைச் சதம் பெற்றார்.
முதல் இன்னிங்ஸில் 57 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த காலி, இரண்டாவது இன்னிங்ஸில் ரமேஷ் பெர்னாண்டோ அரைசத் தத்தைப் பூர்த்தி செய்ததும் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது காலி அணி 5 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தினேஷ் சந்திமால் 2ஆவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்ததுடன் துனித் வெல்லாலகே அரைச் சதம் பெற்று ஆட்டம் இழக்காதிருந்ததார்.
இந்தப் போட்டியில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய அணிகளும் பங்குபற்றின.
இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன் விருதுகளை வென்றெடுத்த அக்கில தனஞ்சயவுக்கு மொத்தமாக 2,500,000/- ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
எண்ணிக்கை சுருக்கம்
காலி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 370 (ஓஷத் பெர்னாண்டோ 120, தினேஷ் சந்திமால் 80, சன்துஷ் குணதிலக்க 39, துனித் வெல்லாலகே 34, மொஹமத் ஷிராஸ் 92 - 4 விக்., அக்கில தனஞ்சய 92 - 2 விக்.)
தம்புள்ளை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 313 (விஷாத் ரந்திக்க 124, ரொன் சந்த்ரகுப்தா 65, சம்மு ஆஷான் 35, நம்சார அத்தரகல 101 - 5 விக்., விஜயகாந்த் வியாஸ்காந்த் 28 - 2 விக்.)
காலி 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது 246 - 5 விக். (தினேஷ் சந்திமால் 64, துனித் வெல்லாலகே 59 ஆ.இ., ரமேஷ் மெண்டிஸ் 50 ஆ.இ., மொஹமத் ஷிராஸ் 35 - 2 விக்.)
விருதுகள்
ஆட்டநாயகன்: தினேஷ் சந்திமால் (கண்டி அணி - கிண்ணத்துடன் 750,000/- ரூபா பணப்பரிசு)
தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரவிந்து ரசன்த (யாழ்ப்பாணம் அணி - 3 சதங்கள், ஒரு அரைச் சதத்துடன் 563 ஓட்டங்கள் - கிண்ணத்துடன் 1,000,000/- ரூபா பணப்பரிசு) ரவிந்து சார்பாக அதிகாரி ஒருவர் பரிசு பெற்றார்.
தொடரில் சிறந்த பந்துவீச்சாளர்: அக்கில தனஞ்சய (தம்புள்ளை அணி - ஐந்து 5 விக்கெட் குவியல்களுடன் 37 விக்கெட்கள் - கிண்ணத்துடன் 1,000,000/- ரூபா பணப்பரிசு)
தொடர் நாயகன்: அக்கில தனஞ்சய (கிண்ணத்துடன் 1,500,000/- ரூபா பணப்பரிசு)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM