டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

30 Apr, 2025 | 05:13 PM
image

இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு  46 சதவீதமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு 17,459 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 5,018 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 985 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

டெங்கு காய்ச்சலின்  அறிகுறிகள் பொதுமக்கள் 24 மணி நேரமும் மருத்துவ உதவியை நாட முடியும்.  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் 24 மணி நேரத்திற்குள் வைத்தியரை நாட வேண்டும்.

டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம்!! பெற்றோர்களுக்குப் வவுனியா...

2026-07-15 10:36:22
news-image

அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு

2026-07-15 10:20:57
news-image

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப்...

2026-07-15 10:23:04
news-image

யாழ். காக்கை தீவு மீள் சுழற்சி...

2026-07-15 10:16:12
news-image

இலங்கை அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்...

2026-07-15 10:20:16
news-image

யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை...

2026-07-15 09:52:17
news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10