மட்டக்குளி, ஜுபிலி மாவத்தைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை களனி பொலிஸார்  நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொலை செய்யப் பயன்படுத்திய ரி - 56 ரக துப்பாக்கியையும் 8 தோட்டாக்களையும் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார். 

கைதுசெய்யப்பட்ட நபர் கயந்த ஜீவித என்ற நபரை சுட்டுக்கொல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்த சந்தேக நபரை பொலிஸார் புதுக்கடை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.