வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட் '

30 Apr, 2025 | 03:47 PM
image

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'தி வெர்டிக்ட்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிருஷ்ண சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரகாஷ் மோகன் தாஸ், வரலட்சுமி சரத்குமார், சுகாசினி மணிரத்னம், சுருதி ஹரிஹரன், வித்யூலேகா ராமன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதித்யா ராவ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், டீசர், பாடல் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனிடையே நடிகை சுகாசினி மணிரத்னம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் தமிழ் படம் இது என்பதும், 'மத கஜ ராஜா' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதும் இதற்காக இப்படத்திற்கு குறைந்தபட்ச ஓப்பனிங் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35