குழந்தைகளுக்கு கொடுக்க வாழைக்காய் மிக்சர் 

30 Apr, 2025 | 03:32 PM
image

தேவையான பொருட்கள்

  • வாழைக்காய் - 2
  • எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
  • கடலை மா
  • அரிசி மா
  • மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  • பொட்டுக்கடலை  
  • நிலக்கடலை 
  • முந்திரி
  • காய்ந்த திராட்சை
  • மிளகாய் தூள் – சிறிதளவு
  • உப்பு - தேவையானளவு

செய்முறை

  • வாழைக்காயை தோல் நீக்கி, கெரட் துருவியில் உள்ள சற்று பெரிய துளையில் வாழைக்காயைத் துருவி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 
  • வெட்டிய வாழைக்காயை, அதன் நிறம் மாறுவதற்குள், உடனடியாக பொரித்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடலை மாவுடன், சிறிது அரிசி மா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, முறுக்கு உரலில் பிழிந்து, அதனையும் மொறு மொறுப்பாக பொறித்துக் கொள்ளவும். 
  • பின்னர், பொரித்து வைத்துள்ள இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொட்டுக்கடலை, பொரித்த நிலக்கடலை, காய்ந்த திராட்சை, முந்திரி, சிறிது மிளகாய் தூள் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து விடவும்.
  • இப்போது, சுகாதாரமான முறையில் தயார் செய்த சுவையான மற்றும் மொறுமொறுப்பான வாழைக்காய் மிக்சர் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right