ஆசியாவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டம் - இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

30 Apr, 2025 | 02:44 PM
image

சல்ஸ்பேக் குளோபல் (Salzburg Global) தனது ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றத்தின் ஆறு திட்டங்களை  வெளியிட்டுள்ளது.  

இத்திட்டங்கள் யாவும் பிராந்தியத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 சமாதான செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 8 பேர் அடங்குகின்றனர். இவர்களுக்கான ஆரம்பகட்ட பயிற்சி கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, இத்திட்டங்கள் பல்வேறு குழுக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டன.  

கொழும்பில் நடத்தப்பட்ட பயிற்சிகளின்போது வழங்கப்பட்ட பின்னூட்டல்களை அடிப்படையாகக் கொண்டு, வெவ்வேறு குழுக்கள் இத்திட்டங்களை செப்பனிட்டன. 

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இந்த ஆறு திட்டங்களும் அமுல்படுத்தலுக்காக வெளியிடப்பட்டுள்ளன. 

பிராந்தியத்தில் சமாதான செயற்றிட்டங்களை ஊக்குவிப்பதற்காக சல்ஸ்பேக் குளோபல்  நிறுவனம் ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றம் ஒன்றை நிறுவியிருந்தது. இம்மன்றத்தின்  அங்கத்தவர்களே, மேற்படி ஆறு திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளனர். 

இத்திட்டங்களை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு குழுக்கள் அமுல்படுத்தவுள்ளன. இத்திட்டத்தில் இலங்கையை சேர்ந்த  8 பேரும், சுமார் மூன்று குழுக்களில் இடம்பெறுகின்றனர்.  

தமது செயற்றிட்டங்களை தனித்தனியாக அமுல்படுத்துவதற்காக ஒவ்வொரு குழுவும் தமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள உதவி வழங்கும் நிறுவனங்களை அணுகவுள்ளன.  

ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றம் பிராந்தியத்தில் அமைதியை கட்டியெழுப்புவதற்கான கூட்டமைப்பாக உள்ளது.  இது சட்டம், கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்கிறது.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சல்ஸ்பேக் குளோபல் (Salzburg Global) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இயக்குநர் கலாநிதி சார்லஸ் எர்லிச், “தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு திட்டங்களும் ஆசிரிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளை மையமாகக் கொண்டவை.  அந்த நாடுகளில் உள்ள மக்களை பிரதானமாகக் கொண்டு அமுல்படுத்தப்படவுள்ளன.  இத்திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தின் சமாதானத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களில் ஒன்று, இந்தோனேஷியாவின் பழங்குடி பெண்களின் உரிமைகளை பாதுகாக்க முற்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிலர்,  சமாதான செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களின்  செயற்பாடுகளோடு தொடர்பான கதைகளை ஆவணப்படுத்த மற்றும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். 

இத்திட்டம் “நாம் வெறும் எண்கள் அல்ல”  எனும் தலைப்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.  இதில், இந்தியா, கென்யா, மியன்மார், பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்  சமாதானத்தை ஊக்குவிக்கும் பெண்ணிய சிந்தனையின் அடிப்படையில் செயற்படும் செயற்பாட்டாளர்கள் முனைப்பு காட்டியுள்ளனர். மற்றுமொரு திட்டம் சமாதானத்துக்கான புத்தகங்களை மக்கள் மையப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 

2021 இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, மியன்மாரின் இளைஞர்கள் முறையான அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.  இது தொடர்பான திட்டம், சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்ட உதவிகளை வழங்கவுள்ளது.  பழங்குடி மக்களின் விவசாய நடைமுறைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கவும் ஒரு திட்டம் காணப்படுகிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜெரோம் பாக்டோல், "பல நூற்றாண்டுகளாக, பழங்குடி விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக நிலத்தை வளப்படுத்தி வந்தனர். இன்று, அவர்களது நடைமுறைகள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50