நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொடை பகுதியில் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெலவத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் 13 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவின் கொடுவில சந்திக்கு அருகில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெரகொடெல்ல - வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நவகமுவ பொலிஸ் பிரிவின் ஸ்வர்ணபூமி மாவத்தை பகுதியில் 12 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 11 கிராம் 917 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நவகமுவ மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றம் 33 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM