முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க எளிய குறிப்புகள்

30 Apr, 2025 | 11:27 AM
image

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில், சீனி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு 1தேக்கரண்டி தேனுடன், 2 தேக்கரண்டி சீனி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சீனி கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.

முகப்பொழிவுக்காக பெரும்பாலும் கடலை மாவை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் முடி வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் உள்ளன. 2 தேக்கரண்டி கடலை மா மற்றும் 2 தேக்கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, முடிகள் உள்ள இடத்தில் தடவி வர, தீர்வு கிடைக்கும்.

சோளமாவுடன், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிதளவு சீனி கலந்து, அதை முகத்தில் முடி உள்ள இடத்தில் மாஸ்க் போல் போட்டு, பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால், முடிகள் நீங்கும்.

பப்பாளி பழத்தின் தோலை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாள வெட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, முகத்தில் போட வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முடிகள் நீங்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், முடிகள் நீங்குவதோடு, சருமம் பளபளப்பாகவும் மாறும்.

வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சீனி சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி, பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.

ஓட்ஸை தூள் செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00