கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை உடன்படிக்கை முடிவுறுத்தப்பட்டது

29 Apr, 2025 | 05:16 PM
image

(நெவில் அன்தனி)

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும்  ஜெவ்னா கிங்ஸ் ஆகியவற்றுடனான தொழில்முறை பங்காளித்துவத்தை முடிவுறுத்திக்கொள்வதாக லங்கா பிறீமியர் லீக்கின் உரிமைத்துவ பங்காளியான ஐபிஜி குறூப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

லீக்கில் பங்குபற்ற தொடங்கியபோது ஐபிஜி குறூப்புடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒப்பந்தக் கடமைகளை அந்தந்த உரிமையாளர்கள் நிறைவேற்றத் தவறியதால் அவர்களுடனான பங்காளித்துவங்கள் முடிவுறுத்தப்பட்டதாக எஸ்எல்சி, ஐபிஜி நிறுவனங்கள் கூட்டாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அடுத்து நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் புதிய உரிமையாளர்களின் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படும்.

இந்த இரண்டு தொழில்முறை அணிகளை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் உரிமைத்துவத்தை இடம்மாற்றம் செய்ய அல்லது நியமிக்கும் உரிமை, எல்பிஎல் தொழில்முறை அணிகளுக்கான பிரித்தியேக உரிமையைக் கொண்டிருக்கும் ஐபிஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

போட்டியின் நேர்மைத்துவத்தையும் உயரிய தரத்தையும் பெணுவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதை எஸ்எல்சி, ஐபிஜி ஆகியன மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அத்துடன் புதுப்பிக்கப்பட்ட அணிகளின் பங்கேற்புடன் போட்டித்தன்மையுடன் கூடிய வெற்றிகரமான லீக் பருவகாலத்தை நடத்த முடியும் என இரண்டு நிறுவனங்ளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03