பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; பின்னணியில் இருப்பது குடு சலிந்துவா?

29 Apr, 2025 | 04:43 PM
image

பாணந்துறை, ஹிரணை, மேற்கு மாலமுல்ல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் இருவரும் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “குடு சலிந்து” எனப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய, சர்வதேச சக்திகளின் சாசன விரோதச்...

2026-07-21 13:04:39
news-image

2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி:...

2026-07-21 16:21:09
news-image

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது ; 2029...

2026-07-21 16:27:20
news-image

கோட்டாபயவின் ஆலோசனை எங்கள் அரசுக்கு தேவையில்லை...

2026-07-21 16:22:05
news-image

323 கொள்கலன்கள் தொடர்பான செயற்குழுவின் விசாரணைகள்...

2026-07-21 16:30:36
news-image

எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும்...

2026-07-21 17:03:31
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன...

2026-07-21 17:15:38
news-image

தேசிய ஹஜ் சட்டம் அமுலுக்கு வந்த...

2026-07-21 17:19:40
news-image

வாக்குறுதியளித்த அரசியல் கலாசாரத்தை அரசு கடைப்பிடிக்க...

2026-07-21 17:20:13
news-image

உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதால்...

2026-07-21 17:30:34
news-image

செம்மணி மனித புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற...

2026-07-21 21:50:56
news-image

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்...

2026-07-21 18:41:40