வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் சமூக சேவைகள்,மகளிர் விவகாரம் மற்றும்புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் சற்றுமுன்னர் வடக்கு மாகாண வடமாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டமையினைத் தொடர்ந்தே இவ்விரு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
இதற்கமைவாக, வடமாகாண கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் விவசாய, கால்நடை அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றவுள்ளார்.
இவர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே முன்பாக பதவியேற்றுள்ளனர்.
மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஆழுங்கட்சி உறுப்பினர்களே கூறிய முறைகேட்டு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார்.
மேற்படி விசாரணை குழு, மாகாண கல்வி அமைச்சர் மற்றும்மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை பதவி நீக்கும்படி பரிந்துரைத்தமைக்கமைய முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
இராஜினாமா செய்திருந்த அமைச்சர்களின் அமைச்சு துறைகளை முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனை மாகாண கல்வி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனை மாகாண பெண்கள் விவகார அமைச்சராகவும் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM