இலங்கையில் ISO 22301:2019 வியாபார தொடர்ச்சி சான்றை பெற்றுள்ள முதலாவது வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம்.
மீண்டெழும் திறன், வியாபார தொடர்ச்சி, புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்து சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), இலங்கையில் வியாபார தொடர்ச்சி முகாமைத்துவத்துக்காக ISO 22301:2019 சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.
தகவல் பாதுகாப்புக்கான நீண்ட கால அர்ப்பணிப்பின் அடிப்படையில் CDB இன் இந்த மைல்கல் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், 2024 செப்டெம்பர் மாதத்தில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான ISO 27001:2022 மீள் சான்றிதழை வெற்றிகரமாக பெற்றுள்ளது.
ஆறு வருடங்களாக பேணியிருந்த, ஏற்கனவே நிறுவனம் பெற்றிருந்த ISO 27001:2013 சான்றிதழிலிருந்து இது மேம்படுத்தப்பட்ட சான்றிதழாகவும் அமைந்துள்ளது.
இந்தச் சான்றிதழ்களுடன், நிதித் துறையில் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு நியமங்கள் போன்றவற்றில் CDB புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு செயற்பாடுகள் தடங்கலின்றி தொடரும் என்பதற்கான உறுதி இந்த சான்றிதழ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதற்கமைய, CDB தொடர்ந்தும் தொழினுட்பவியல்சார் மீட்சி மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகயிவற்றில் முன்னிலை வகிக்கிறது.
வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் தொழினுட்பசார் புத்தாக்கம் போன்றவற்றில் நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனம் செலுத்துகையினூடாக, பங்காளர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள அக்கறை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடமிருந்து: LL-C ஸ்ரீ லங்காவின் பணிப்பாளர் நிஷாதி ராஜபக்ச, ISO 22301:2019 சான்றிதழை, CDB இன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி ஷவீந்திர பெர்னான்டோவிடம் கையளிப்பதையும், அருகில் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் நானயக்கார மற்றும் இடர், ஒழுக்கச் செயற்பாட்டு அணியினர் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM