எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு அமைக்கப்படும் அனைத்து தானசாலைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.
தானசாலைகள் அமைக்கப்படும் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.
தானசாலைகளை பதிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சமில் முத்துக்குடா,
நாடளாவிய ரீதியில் தானசாலையை அமைக்க விரும்பும் எவரும் தேவையான வழிகாட்டுதல்களை பெற்று தங்கள் பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யும் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
எனவே, அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகரை (PHI) சந்தித்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான ‘தானசாலைகளை’ அமைக்க தேவையான அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுகளில் வழங்கப்படும் உணவின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, அனைத்து தானசாலைகளும் பொது சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் நிகழ்வுக்கு முன்னரும், உணவு விநியோகம் செய்யப்படும் நாளிலும் நடத்தப்படும்.
நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு குடி நீரின் தரம் மற்றும் விநியோக செய்யப்படும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்,” என தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM