(நெவில் அன்தனி)
கொழும்பு சிசிசி மைதானத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற இரண்டாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை 9 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி இலகுவாக வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் 6 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
அல் பஹாத்தின் 6 விக்கெட் குவியல், ஸவாத் அப்ராரின் அபார சதம், அஸிஸுல் ஹக்கிமின் அரைச் சதம் என்பன பங்களாதேஷை வெற்றி அடையச் செய்தன, அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் சாமிக்க ஹீனட்டிகல 51 ஓட்டங்களையும் தினுர தம்சித் 47 ஓட்டங்களையும் திமன்த மஹாவித்தான 39 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அல் பஹாத் 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 34.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஸவாத் அப்ரார் 106 பந்துகளில் 14 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 130 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் 69 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM