பாதுகாப்பற்ற முறையில் ரயில் கடவையில் பயணித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் கடவை மூடப்பட்டிருந்த போதும் அதை கடந்து சென்ற குற்றத்திற்காகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.