தடைகளை உடைக்கும் பிரத்யேக மலர் மருத்துவ குறிப்பு..!!?

28 Apr, 2025 | 05:48 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பல வகைகளில் நாமே காரணமாக இருக்கிறோம். எம்முடைய பேச்சு - எம்முடைய உடல் மொழி - எம்முடைய சிகை அலங்காரம் - எம்முடைய தோற்றம்- அணியும் ஆடைகள்- எம்முடைய நடவடிக்கைகள் என பல விடயங்கள் சூட்சமமாக எமக்கு எதிராகவே செயல்படுகின்றன.

அதாவது எமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பினை தடை செய்யும் காரணிகளாக இருக்கின்றன. இதனை நாம் தெரிந்து கொள்ளாமல் எம்முடைய தடைகளுக்கு மற்றவர்களை குறை சொல்லி கொண்டிருக்கிறோம். எம்முடைய வளர்ச்சிக்கு நாம் தடையில்லை என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அதையும் கடந்து நாம் தான் தடையாக இருக்கிறோம் என்றால் அதனை உடைத்தெறிவதற்கான சூட்சம குறிப்புகளையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் :  ஸ்டார் ஆஃப் பெத்லகேம் எனும் மலர் மருந்து உருண்டைகள்.

எமக்கு அறிமுகமான நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஹோமியோபதி மருந்துகளை விற்பனை செய்யும் நிலையத்திலோ ஸ்டார் ஆப் பெத்லகேம் எனும் மலர் மருந்தினை உருண்டை வடிவில் இருக்கிறதா என கேட்டு அதனை தெரிவு செய்து கொள்ளவும்.

இதனை உங்களுடைய பிறந்த கிழமைகளில் காலை - மதியம் - இரவு - என மூன்று வேளையும் பசியாறிய பிறகு நான்கு என்ற எண்ணிக்கையிலான ஸ்டார் ஆப் பெத்லகேம் மலர் மருத்துவ உருண்டையை சாப்பிடுங்கள்.

இதனை தொடர்ந்து 21 நாட்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு வர உங்களுக்கு நீங்களே விதித்துக் கொண்டிருந்த மாயத் தடைகள் விலகி, உள்ளுக்குள் உத்வேகம் பிறந்து, முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியை காண்பீர்.

உங்களது வீட்டில் யாரேனும் உங்களது முயற்சிக்கு தடையாக இருந்தால் அவர்களுக்கும் இத்தகைய மருந்தினை தண்ணீரில் கலந்து பருக சொல்லுங்கள்.

உங்களுக்கு சுப பலன் கிடைக்கும் . 48 நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு தடையாக இருந்தவர்கள் மனமாற்றம் அடைந்து உங்களுக்கு பச்சை கொடியை காட்டுவார்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கான பணியை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருக பெருமானின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-05-12 16:36:06
news-image

வாக்கு வன்மை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!

2025-05-10 16:48:36
news-image

செவ்வாய் தோஷத்துக்கான ஓர் எளிய பரிகாரம்

2025-05-10 13:54:27
news-image

இஷ்ட தெய்வங்களின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-05-09 14:46:27
news-image

வருவாய் குறையாதிருக்க வழிபட வேண்டிய சூட்சம...

2025-05-08 15:06:09
news-image

செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான சூட்சம...

2025-05-07 17:36:51
news-image

தங்க நகை ஆபரணங்களை சேமிப்பதற்கான பிரத்யேக...

2025-05-06 15:57:43
news-image

தற்காத்துக் கொள்வதற்கான பிரத்தியேக வழிபாடு..!?

2025-05-05 17:23:56
news-image

பணக்கஷ்டத்தை போக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்

2025-05-05 14:55:46
news-image

கவலைகளை குறைக்கும் கருப்பு வெள்ளை வண்ண...

2025-05-02 15:45:25
news-image

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் தெரியுமா? 

2025-05-02 10:59:34
news-image

தடைகளை அகற்றும் வலிமையான வாழ்வியல் பரிகாரம்..!!?

2025-04-30 16:19:45