அட்ரீனல் பியோக்ரோமோசைட்டோமா எனும் சிறுநீரக கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

28 Apr, 2025 | 05:33 PM
image

எம்மில் பலருக்கும் திடீரென்று ரத்த அழுத்த மாறுபாடு பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து முறையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவை சிறுநீரகத்தில் ஏற்படும் கட்டியாக கூட இருக்கலாம். இதனை மருத்துவ மொழியில் அட்ரீனல் பியோக்ரோமோசைட்டோமா என குறிப்பிடுவார்கள். இதற்கு தற்போது நவீன றொபாடிக் முறையில் சத்திர சிகிச்சை செய்து முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய உடலில் கழிவுகளை வெளியேற்றுவதை முதன்மையான பணியாக கொண்டிருக்கும் சிறுநீரகத்தின் மேல் பகுதியில் அட்ரீனல சுரப்பிகள் அமையப் பெற்றுள்ளது.

இந்த சுரப்பியில் வளர்ச்சிதை மாற்றம் - பாலியல் வளர்ச்சி- மன அழுத்தம் - உள்ளிட்ட உடலின் தேவைகளுக்கான ஹோர்மோன் சுரக்கிறது. இரண்டு சிறுநீரகங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்த சுரப்பியின் மேற்பகுதியில் இரத்த அழுத்த அழுத்தம், வளர்ச்சிதை மாற்றம்,  கொழுப்புகள்,  கொர்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவற்றின் காரணமாக இங்கு சுரக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.இவையே கட்டியாக உருவெடுக்கிறது. இது தீங்கற்ற கட்டியாகவும் அதாவது புற்றுநோயாக மாறாத கட்டியாகவும், புற்றுநோயாக மாறக்கூடிய கட்டியாகவும் மாற்றம் பெறுகிறது.

இதில் அட்ரினல் பியோக்ரோமோசைட்டோமா எனும் தீங்கற்ற கட்டிகளை தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் துல்லியமாக அவதானித்து,  நவீன கணினி கணிணி உதவியுடனான றொபாட்டிக் கருவி மூலம் சத்திர சிகிச்சை செய்து முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

இந்த சத்திர சிகிச்சை கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு இடையே மேற்கொள்ளப்படுவதால் சிக்கலானது. ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ தொழில் நுட்பங்களால் இதனை எளிதாகவும், துல்லியமாகவும் மேற்கொண்டு, முழுமையான நிவாரணத்தை வழங்க இயலுகிறது.

வைத்தியர் விகாஸ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விபத்தில் பாதிக்கப்பட்ட விரல்களுக்கான நவீன சத்திர...

2025-05-14 16:05:53
news-image

சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள்...

2025-05-14 01:21:04
news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02
news-image

ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-05-08 15:07:36
news-image

பச்சிளம் குழந்தைகளின் தீரா அழுகைக்கு நிவாரணமளிக்கும்...

2025-05-07 17:36:27
news-image

காது வலி…! காரணம் என்ன?

2025-05-07 16:45:10
news-image

மூளை மற்றும் தண்டுவட பாதிப்பிற்கு நிவாரணம்...

2025-05-06 16:39:12
news-image

ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்துவதற்கான பிரத்தியேக பரிசோதனை

2025-05-05 17:20:19