யோகி பாபுவின் 'ஜோரா கையதட்டுங்க ' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

28 Apr, 2025 | 05:47 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' ஜோரா கைய தட்டுங்க ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குவர் வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜோரா கைய தட்டுங்க' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, சாந்தி ராவ், 'அருவி' பாலா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மது அம்பட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். அருணகிரி- நிதின் கே. ரோஷன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாமா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாகீர் அலி தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டில் வெளியான ' போட் 'எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதால் அவர் மீண்டும் கதையின் நாயகனாக - தனி கதாநாயகனாக நடித்திருக்கும் ' ஜோரா கைய தட்டுங்க ' எனும் திரைப்படம் வெளியாவதால் இந்த திரைப்படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07