நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் குற்றம் தவிர் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

28 Apr, 2025 | 05:47 PM
image

நடிகர் ரிஷி ரித்விக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' குற்றம் தவிர் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இசையமைப்பாளர் கங்கை அமரன், குருஜி ஜெய் பிரகாஷ், தொழிலதிபர் பிரகாஷ் பழனி, ஆர். அரவிந்தராஜ் - பேரரசு - பவித்ரன் - ராஜகுமாரன் - உள்ளிட்ட இயக்குநர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இயக்குநர் கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி வரும்' குற்றம் தவிர் 'எனும் திரைப்படத்தில் ரிஷி ரித்விக், ஆராத்யா, சாய் தீனா, 'பருத்திவீரன்' சரவணன் , வினோதினி வைத்தியநாதன், ஆனந்த் பாபு , சென்ராயன், ஜார்ஜ் விஜய்,  மீசை ராஜேந்திரன் , காமராஜ், குழந்தை நட்சத்திரம் சாய் சைந்தவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

சரவணன் வில்லனாக நடித்திருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் குற்றம் தவிர் உருவாகி இருக்கிறது. குற்றத்தை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் இப்படத்தில் பேசி இருக்கிறோம். தயாரிப்பாளர் தமிழுக்கு புதிது. இதனால் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் ''என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து...

2025-05-15 18:56:52
news-image

ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய்...

2025-05-15 18:59:04
news-image

ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

2025-05-15 18:59:25
news-image

லெவன் - திரைப்பட விமர்சனம்

2025-05-15 19:00:26
news-image

இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும்...

2025-05-15 16:36:22
news-image

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

2025-05-15 16:17:26
news-image

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

2025-05-15 13:58:26
news-image

ஜூனில் வெளியாகும் விமலின் 'பரமசிவன் பாத்திமா'

2025-05-14 16:56:52
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'காயல்' பட...

2025-05-14 16:55:55
news-image

வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்'

2025-05-14 19:23:41
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும்...

2025-05-14 16:07:51
news-image

“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” -...

2025-05-14 16:07:37