வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் வடமாகாண தலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

வடமாகாண சபை அமர்வு நாளை காலை கைதடியில் இடம்பெறும் வேளையிலேயே இப்பதவியேற்பு நிகழ்வும் இடம்பெறும். கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சராக அனந்தி சசிதரனும் பொறுப்பேற்கவுள்ளனர்.

கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டமையினைத் தொடர்ந்தே இவ்விரு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.