நடிகர் ஆதம் ஹசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' அகமொழி விழிகள் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கே .ராஜன் - இயக்குநர் பேரரசு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ' அகமொழி விழிகள் ' எனும் திரைப்படத்தில் ஆதம் ஹசன், நேகா ரத்னாகரன், தர்மஜன், நவோதயா சாஜூ, கொளப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி கே ஆர், ஹரிதா, ராஷி, தீபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஜஸ்பால் சண்முகம் மற்றும் ராஜேஷ் செல்வகுமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் பி வெங்கடேஷ் மற்றும் ஜுபைர் முகமது ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை சச்சுஸ் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பௌலோஸ் ஜோர்ஜ் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே. ராஜன் இயக்குநர் பேரரசு, 'மங்கை' அரி ராஜன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றிய இயக்குநர் பேசுகையில், '' பார்வை திறன் சவால் உள்ள மாற்று திறனாளியான நாயகன்- இசைக் குழு ஒன்றில் பாடுகிறான். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது.. அதற்காக களம் இறங்குகிறான். எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பதை சுவராசியமான திரில்லராக உருவாக்கி இருக்கிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM