நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் : அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றம் இதுவா ? ; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

29 Apr, 2025 | 09:51 AM
image

(எம்.மனோசித்ரா)

பல பொய்யான வாக்குறுதிகளுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டிலும் வெற்றி பெற்ற ஜே.வி.பி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் பொய்களால் மக்களை ஏமாற்றி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் இருப்பதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இதுதான் அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

உடுநுவர, கெலிஓயா பிரதேசத்தில் திங்கட்கிழமை (28)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வளமான நாடு அழகான வாழ்க்கையை அமைத்து தருவோம் என வாக்குறுதி அளித்தனர். வழங்கிய வாக்குறுதிகளை மீறும் நடவடிக்கையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

தொடர் ஏமாற்றமே இன்று மக்களிடம் எஞ்சியுள்ளது. தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என கூறப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த கையோடு அரிசி, பால் மா, தேங்காய் போன்றவற்றின் விலைகளைக் குறைப்போம் என தெரிவித்தனர். ஆனால் இன்று பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து காணப்படுகின்றன.

மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க முடியாத ஆட்சியொன்றே இன்று உதயமாகியுள்ளது. 9000 ரூபா மின்சாரக் கட்டணத்தை 6000 ரூபாவாக மாற்றி 33 சதவீதத்தால் குறைப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஊழல், மோசடி, களவுகளை ஒழிப்போம் என பிரஸ்தாபித்தனர்.

எரிபொருள் விலையைக் குறைப்போம் என்றனர். பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியை நீக்குவோம் என்றனர். இதுவரை நடந்தது ஒன்றும் இல்லை. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உர மானியம் கிடைத்தப்பாடில்லை. அவ்வாறிருக்கத் தக்க ஏனைய பயிர்களுக்கு மானியம் வழங்கப்படும் என தேர்தல் மேடைகளில் கூறி வருகின்றனர். இந்த அரசாங்கம் எப்பொழுதும் ஏதாவது பொய்களை கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் மனதை வெல்வதற்காகவே முயற்சித்து வருகிறது.

தற்போது பழைய பொய்களை தவிர்த்து புதிய பொய்களையும் கூறி இமக்களை ஏமாற்றி வருகின்றனர். எமது நாட்டில் வறுமை 33 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கியின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இல்லை என அரசாங்கம் தெரிவித்தாலும், மூன்றில் ஒரு பகுதியினர் ஏழ்மையோடே வாழ்ந்து வருகின்றனர் என உலக வங்கி புதிய தரவுகளோடு சுட்டிகாட்டுகிறது. இந்த வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் எதனையும் இதுவரையில் இந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.

திசைகாட்டி அதிகாரத்தைப் பெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி வழங்குவோம் என அரசின் கடைசி துருப்புச் சீட்டை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளுர் அதிகார சபை சட்டங்களைக் கூட புரிந்து கொள்ளாத ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். தற்போது ஜே.வி.பிக்கு மாத்திரம் தலைவராக இருந்து கொண்டு பக்கச்சார்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

2025-06-17 01:48:46
news-image

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள்...

2025-06-16 23:32:40
news-image

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2025-06-16 21:38:20
news-image

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் -...

2025-06-16 21:11:29
news-image

மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு...

2025-06-16 20:58:50
news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் செயலிழக்கச்...

2025-06-16 17:21:34
news-image

உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ள...

2025-06-16 18:29:37
news-image

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

2025-06-16 19:20:26
news-image

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து

2025-06-16 19:18:43
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள்...

2025-06-16 19:04:06
news-image

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச்...

2025-06-16 18:58:49
news-image

இரத்தினபுரி பிரதேச சபையில் ஆட்சி அமைத்த...

2025-06-16 18:31:04