ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.
ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் காணப்படுகிறது.
இதனால் சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில செயற்பாடுகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
மனிதர்களிடம் பேசும்போது கூறுவதைப் போல செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போதும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதால் பல மில்லியன் டொலர்கள் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலானது, நம்மில் பலரும் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மாடல்களை பயன்படுத்தும் போது சாதாரணமாக தேங் யூ , ப்ளீஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம்.
ஆனால் இதற்காக அவர்கள் எத்தனை கோடியை இழக்கிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கக்கூட மாட்டோம். ப்ளீஸ், தேங்க்யூ என்ற இரண்டு வார்த்தையால் எப்படி இவ்வளவு செலவாகும் என்று பார்ப்போம்..!
பொதுவாக நாம் ஏதேனும் ஒன்றை டைப் செய்து அதை சாட் ஜிபிடியில் கேட்கிறோம் என்றால் அதை டோக்கன்கள் ஆக மாற்றி செயல்படுத்தும். நான்கு எழுத்துக்களை ஒரு டோக்கனாக கணக்கிடும். அதன்படி please என்ற வார்த்தை 1.5 டோக்கன் எடுத்துக்கொள்ளும்.
அதேபோல thank you என்பது இரு வார்த்தையாக இருப்பதால் அதற்கு 3 டோக்கன் எடுத்துக்கொள்ளும்.
சாட் ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு தோராயமாக 2.9Wh மின்சாரம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. இது கூகிள் தேடலில் கேட்கப்படுவதற்கு, செலவாகும் மின்சார நுகர்வை விட 10 மடங்கு அதிகம்.
கோடிக்கணக்கான பயனர்கள் இது போன்ற வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால், கற்பனைக்கு எட்டாத அளவில் செலவு சாட் ஜிபிடிக்கு ஏற்படுகிறது.
இதனால் அவர்கள் பல மில்லியன் கணக்கான தொகையை இழக்க நேரிடுகிறது. ஏஐ-க்கு மரியாதை கொடுப்பது அவசியமற்றது எனவும் சாம் ஆல்ட்மேன் கருதுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM