bestweb

ஜனாதிபதியிடம் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள கோரிக்கை  

28 Apr, 2025 | 04:10 PM
image

மாமனிதர் தராகி சிவராமினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நடப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக விடுவித்து, அதனை யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து, ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தினரான நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கிறது.

இலங்கையின் மிக முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவராக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கிய மாமனிதர் தராகி சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை உரிய விசாரணை  எதுவும் இன்றி ஆட்சிகள் மாறினாலும் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலும், அதற்கான நீதி பொறிமுறை உருவாக்கப்படாமலும் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றமை இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குட்பட்டதான பாதுகாப்பு மற்றும் நீதித்துறை மீதான ஐயப்பாட்டினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போகும் சம்பவங்கள், கைது நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் தமிழ் ஊடகத்துறையை அச்சுறுத்தி அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முனைப்புகள் தற்போதும் புதுப்புது வடிவங்களில் தொடர்ந்தே வருகின்றன. 

தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வரும் ஊடகத்துறையை நசுக்குவதன் ஊடாக தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் நோக்கிலேயே இவை தொடர்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இலங்கை அரச படைகள் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுவினருமே இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அவ்வாறு இருந்தும் நிமலராஜன் முதல் சிவராம் வரையான பல ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் நீதி பொறிமுறை ஊடாக கண்டுபிடிக்கப்படாத நிலையே தற்போது வரை தொடர்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீதான இவ்வாறான அச்சுறுத்தல் நிலையானது இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் மீதான கொடூரமான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.

கொலைக் கலாசாரத்தின் பின்னணியில் ஊடகத்துறை மீதான இவ்வாறான தலையீடுகள் தொடர்வதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இதுவரைக் காலமும் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட புதிய அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாளில் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கிறது.

மாமனிதர் தராகி சிவராமால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நடப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை, இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக விடுவித்து, அதனை யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து, ஊடக கற்கைபீடமாக தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தினரான நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52