(ரொபட் அன்டனி)

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றவர்களுக்கு  தனியான ஒரு இடத்தை வழங்குவது குறித்து ஆராய்ந்துவருகின்றோம். அடையாளப்படுத்தப்படும் வீதிகளில் இனி ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என்று  அமைச்சரவைப் பேச்சளார் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில்  கலந்து  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.