கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார்.

35 வயதான செரினா வில்லியம்ஸ் மற்றும் ரெட்டிட் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்ஸ் ஒஹானிய உடன் நிச்சயதார்த்தம் கடந்த 2016 டிசம்பரில் நடந்தது. தொடர்ந்து 2017 ஜனவரியில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். இதன் இறுதிப் போட்டியில் தனது சகோதரியான வீனஸ் வில்லியம்சை வென்று, 23 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி, முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில் வேனிட்டி ஃபேர்`  என்ற புத்தகத்தின் அட்டை படைத்தில் நிர்வாண கோலத்தில் செரீனா வில்லியம்ஸ் கர்பமான வயிறை காட்டும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இருப்பதாக நினைக்கவேயில்லை என்று வேனிட்டி ஃபேர் சஞ்சிகையிடம் செரீனா தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது நண்பர் செரீனா கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி, அவரை மருத்துவ சோதனை எடுத்துக் கொள்ள ஆலோசனை செய்திருந்தார்.

அவுஸ்திரலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ளாடை நிறுவனத்துக்காக ஃபோட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது கர்ப்ப சோதனை நடத்திய செரீனா, கர்ப்ப சோதனையின் முடிவுகளால் ''எனது இதயம் கிட்டத்தட்ட நழுவிவிட்டது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செரீனா மற்றும் அலெக்ஸ் ஒஹானிய தாங்கள் முதன் முதலாக சந்தித்து பேசிக் கொண்ட இத்தாலியில் உள்ள கேவாலியரி ஹோட்டலின் குறிப்பிட்ட உணவு மேசையில், கடந்த டிசம்பரில் தனது காதலை அலெக்ஸிஸ் ஒஹானியன் செரீனாவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.