(நெவில் அன்தனி)
டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு மின்னொளியில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 46ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 6 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றியீட்டியது.
மிகவும் இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, க்ருணல் பாண்டியா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிப் பாதையில் இட்டனர்.
அணிகள் நிலையில் தலா 12 புள்ளிகளுடன் முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் அணியும் ஒன்றையொன்று வீழ்த்தி முதலாம் இடத்திற்கு முன்னேறும் முயற்சியுடன் இந்தப் போட்டியில் விளையாடின.
இந்தப் போட்டியில் தனது 7ஆவது வெற்றியை ஈட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 14 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியது.
டெல்ஹி கெப்பிட்டல் இந்தத் தோல்வியால் 3ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
கே.எல். ராகுல் 41 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
அவர்களை விட ஆரம்ப வீரர்களான அபிஷேக் பொரெல் 28 ஓட்டங்களையும் பவ் டு ப்ளெசிஸ் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் அக்சார் பட்டேல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்குளூருவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜேக்கப் பெதெல் (12), தேவதத் படிக்கல் (0), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (6) ஆகிய மூவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (26 - 3 விக்.)
ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லியும் க்ருணல் பாண்டியாவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து 4ஆவது விக்கெட்டில் 119 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
வெற்றிபெறவேண்டும் என்பதை மாத்திரம் மனதில் நிறுத்தி வழமைக்கு மாறாக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 47 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய க்ருணல் பாண்டியா 47 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டிம் டேவிட் 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 24 ஓட்டங்களுக்கு ஒரு விகக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: க்ருணல் பாண்டியா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM