சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான தேசிய திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

Published By: Vishnu

27 Apr, 2025 | 07:49 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. எந்நேரத்தில் எங்கு என்ன நடக்கும் என தெரியாதுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான தேசிய திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின் நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போது சமூகம் கொலைகாரர்களின் பிடியில் சிக்கியுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. எந்நேரத்தில் எங்கு என்ன நடக்கும் என தெரியாதுள்ளது. வீடுகளிலும், வீதிகளிலும், பணியிடங்களிலும், நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலும் துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. பிள்ளைகள், பெற்றோர்கள், பெண்கள் முன்னிலையிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சரமாரியாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தும் பாதாள உலகக் கும்பல்களின் பிடியில் நாடு சிக்கித் தவிக்கின்றது.

சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது. அரசிடம் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான தேசிய திட்டமொன்று இல்லை. பதிவாகிக் கொண்டிருக்கும் கொலைகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து வகுப்பெடுப்பதாகக் கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு தற்போது நாம் வகுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜைகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதும், சட்டத்தை அமுல்படுத்துவதும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரச தலைவரின் பொறுப்பாகும். இது ஜனாதிபதியின் பொறுப்பாகும். ஆனால் இந்த ஜனாதிபதியின் கீழ் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துபோயுள்ளது. பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மேலதிகமாக கிராம மட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் சமூகப் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி, மக்களின் பங்களிப்புடன் சகல பிரதேசங்களையும் பாதுகாக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊடாக மக்களை மையமாகக் கொண்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கைப் பேண முடியும். இதன் ஊடாக பாதாள உலகக் கும்பல்களை மக்கள் பங்கேற்புடன் கட்டுப்படுத்த முடியும். பாதாள குழுக்கல், கப்பம் கோரும் குழுக்கள் மற்றும் கொலைகாரர்களை இல்லாதொழிப்ஙதற்கு புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சமூகத்தில் இக்குற்றங்களைத் தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். வழமையான வழிமுறைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு இவற்றுக்கு தீர்வு காண முடியாது. எனவே புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் பங்கேற்புடன் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

மேலும் திசைகாட்டி அரசு தலைமையிலான ஜனாதிபதி எழுதிய கடிதத்தால், டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் ஒருவர் பிரஸ்தாபித்தார். பின்னர் வேறு ஒரு தூதுக் குழு அமெரிக்கா பயணமாகி கலந்துரையாடல்கள் எமக்கு சாதகமாக இறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர். இந்த வரியை திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த போதிலும், அவ்வாறான அறிக்கை எதுவும் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பொது வெளிகளில் இவ்வாறான பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36