உயர்தர பரீட்சையில் சாதனைபடைத்த இரட்டை சகோதரர்கள்

Published By: Vishnu

27 Apr, 2025 | 06:42 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் 3 'ஏ' சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 'ஏ' சித்திகளைப் பெற்றது மாத்திரமின்றி அகில இலங்கை ரதீயில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

யாழ். கொக்குவில் தலையாழி வைரவர்கோவிலடியைச் சேர்ந்த ஜமுனாநந்தா பிரணவன் மற்றும் ஜமுனாநந்தா சரணவனன் ஆகியோரே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தாவின் புதல்வர்களான இவர்கள் யாழ் இந்து கல்லூரி மாணவர்களுமாவர்.

யாழ் இந்து கல்லூரியில் இம்முறை 55 மாணவர்கள் '3ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர். அதேவேளை 33 மாணவர்கள் '2ஏ' சித்திகளைகளையும், 18 மாணவர்கள் '1ஏ' மற்றும் '2பீ' சித்திகளையும் பெற்றுள்ளனர். பௌதீக விஞ்ஞானப்பிரிவிலேயே அதிகளவான மாணவர்கள் '3ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அதற்கமைய பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 27 மாணவர்கள் '3ஏ' சித்திகளையும், 15 மாணவர்கள் '2ஏ' சித்திகளையும், 11 மாணவர்கள் '1ஏ' '2பீ' சித்திகளையும் பெற்றுள்ளனளர். உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 22 மாணவர்கள் '3ஏ' சித்திகளையும், 13 மாணவர்கள் '2ஏ' சித்திகளையும், 5 மாணவர்கள் '1ஏ' '2பீ' சித்திகளையும் பெற்றுள்ளனளர்.

வணிகப்பிரிவில் ஒருவர் '3ஏ' சித்திகளையும், இருவர் '2ஏ' சித்திகளையும், இருவர் '1ஏ', '2பீ' சித்திகளையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் இருவர் '2ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர். ஏனைய பிரிவுகளில் ஐவர் '3ஏ' சித்திகளையும், ஒருவர் '2ஏ' சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு...

2026-07-12 13:46:25
news-image

இராணுவ அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலுக்கு...

2026-07-12 19:03:48
news-image

இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர...

2026-07-12 17:46:58
news-image

இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தினால் 'மாவதே...

2026-07-12 17:28:02
news-image

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை...

2026-07-12 17:21:07
news-image

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா....

2026-07-12 17:19:33
news-image

ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கு இலங்கைத்...

2026-07-12 16:44:33
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-12 16:11:46
news-image

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து -...

2026-07-12 16:11:06
news-image

யாழ். வட்டுக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்...

2026-07-12 15:25:46
news-image

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை...

2026-07-12 15:24:54
news-image

இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை காணி அளவீட்டு நடவடிக்கையைத்...

2026-07-12 15:02:04